i am

Friday, May 27, 2011

ராஜ்பவன் சிறைச்சாலை; நான் சிறைப்பறவை: கவர்னர் பரத்வாஜ்

பெங்களூரு: ""கவர்னர் மாளிகை, சிறைச்சாலையாக உள்ளது. அதில் நான் சிறைப் பறவையாக உள்ளேன். என் அறிக்கையை மத்திய அரசு நிராகரித்ததால், மனம் நொந்துள்ளேன்,'' என, கவர்னர் பரத்வாஜ் அதிருப்தி தெரிவித்தார்.

கர்நாடக ராஜ்பவனில் (கவர்னர் மாளிகை) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் பரத்வாஜ் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு நான் செய்த சிபாரிசை, மத்திய அரசு தடாலடியாக புறக்கணித்ததால், மிகவும் மனம் நொந்துள்ளேன். அரசியல் விதிகளுக்குட்பட்டு பணியாற்ற வேண்டிய நிர்பந்தம். தன்னிச்சையாக என்னால் முடிவுகளை மேற்கொள்ள முடியாது. கவர்னர் மாளிகை சிறைச்சாலை போன்றுள்ளது. இதில் சிறைப்பறவையாக உள்ளேன். அரசியலுக்கு நான் வந்ததே தற்செயலாகும். நான் அரசியல்வாதியோ, தத்துவ விஞ்ஞானியோ அல்ல; நல்ல வக்கீல். அரசியலுக்கு வந்த பின்னர், பல சிறிய தவறுகளை செய்துள்ளேன். கவர்னர் மாளிகை, சிந்தனைவாதிகளுக்கு என்றுமே வாயிலை திறந்து வைத்து காத்திருக்கும். கவர்னர் மாளிகையில் ஒரு அறை மட்டுமே என்னுடையது; மற்ற அறைகள் அனைத்துமே மக்களுடையது. எந்த நேரத்திலும் மக்கள், ராஜ்பவனுக்கு வரமுடியும். அரசியல்வாதியாவதற்கு முன்னர் நல்ல கட்டுப்பாட்டுடன் வக்கீலாக இருந்தேன். நீதிமன்றங்களுக்கு மரியாதை கொடுத்துள்ளேன். அவர்களும் என்னை மரியாதையுடன் நடத்தியுள்ளனர். கர்நாடக மாநிலம் உயர்ந்த கலாசாரம், சிந்தனையாளர்களைக் கொண்டது. இவ்வாறு கவர்னர் பேசினார்

2 comments:

  1. word verification எடுத்து விட்டுடுங்க. கருத்து சொல்பவர்களுக்கு எளிதாக இருக்கும்!

    ReplyDelete